ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம் – இரு மஹாவித்வான்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: 

<< ஆசார்யன் அநுக்கிரகம்

சென்ற நூற்றாண்டில் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருபெரும் மஹநீயர்கள் சூர்ய சந்திரர்களாய் விளங்கினர். கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ.வே. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமியும், கீர்த்தி மூர்த்தி ஸ்ரீஉ.வே காரப்பங்காடு வேங்கடாசாரிய ஸ்வாமியும் ஆவர். அப்படிப்பட்ட காரப்பங்காடு ஸ்வாமியுடனே இவர் எப்போதும் இருந்தார் என்பதைப் பார்த்தோம்

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமியும் இவர் மேல் மிக்க அபிமானம் கொண்டிருந்தார்.

ஓர் சுவையான சம்பவத்தை மட்டும் காண்போம். இந்நிகழ்வுக்கு முன்னரே இருவரும் அறிமுகம் ஆனவர்கள். ஓர் நாள் நம் குமாரவாடி ஸ்வாமி காஞ்சியில் முதலியாண்டான் சந்நிதிக்குச் சென்று கொண்டிருக்க, அப்போது நம்பிள்ளை சந்நதியிலிருந்து இவரைப் பார்த்த காஞ்சி ஸ்வாமி, இவரை ஆள் அனுப்பி அழைத்துவரச் சொல்லி, நலம் விசாரித்து, தாம் இவருடைய பிரசாரத்தைக் கேட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அன்றைய தினம் பெரியவாச்சான் பிள்ளை திருநக்ஷத்திரம் ஆதலால் கோஷ்டியில் கலந்துகொண்டு, அவரைப் பற்றி உபந்யாசம் செய்து, “நாவீறு காட்ட வேண்டும்” என்று இவருக்குக் கூறியுள்ளார்.

ஸ்வாமியும் அவ்வாறே கலந்து கொண்டு, பெரியவாச்சான் பிள்ளையைப் பற்றி விளக்கமாகவும், புதிய விஷயங்களையும் எடுத்துக்கூறினார். அதன் பிறகு மகிழ்ந்த காஞ்சி ஸ்வாமி இவரை, “திருநாவீறுடைய பிரான்” என்று பட்டமும் வழங்கினார். அப்படி இரு துருவங்களாய் இருந்தவர்களின் ஆசியையும் பெற்றவராய் விளங்கினார் நம் குமாரவாடி ஸ்வாமி.

ஸ்ரீவைஷ்ணவ ஸிம்ஹம் ஸுதர்சனர் (ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்) இவரது வைணவப்பணி சிறக்க வாழ்த்தி பெரிய மடலை எழுதியுள்ளார் (அதையும் இந்நூலுடன் இணைத்துள்ளோம்). ஐக்கிய வைஷ்ணவ பிரசாரத்தில் அவருடன் சேர்ந்து தென்கலை வடகலை ஒற்றுமைக்காக பணியாற்றியவர் என்பதும்  குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.

‘வைகுண்டவாசி’ “ஸ்ரீ உ.வே. வேளுக்குடி வரதாசாரியார் ஸ்வாமி” இவரிடம் அன்பு கொண்டவர். அதேபோல் வைகுண்டவாசி “ஶ்ரீ உ.வே. பிள்ளைலோகம் பாஷ்யகாரர்” ஸ்வாமியும் இவரிடம் பரிவு கொண்டவர.
இப்படி நம் ஸ்வாமி தம்முடைய பூர்வாசிரமத்தில் குமாரவாடி சே. ராமாநுஜாசார்யராக இருந்த போது, ஸ்ரீ உ.வே. பிள்ளைலோகம் ஸ்தல சயனத் துறைவார், திருச்சித்திரகூடம் ஏ.வி.ஆர் ஸ்வாமி, திருப்பதி ஜீயர்கள், ஸ்ரீ பெரும்பூதூர் எதிராஜ ஜீயர் ஸ்வாமி, முக்கியமாகத் திரிதண்டி பெரிய ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி போன்ற அனைவருடைய பாராட்டையும் பெற்றிருந்தார்.

அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.